அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் பொதுமக்கள் வரி சுமை அதிகரிக்கும் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் வேதனஉயர்வை வழங்கினால், தற்போதுள்ள வற் வரியை உயர்த்த நேரிடும் எனதிறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.தற்போதுள்ள 18% வற்வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும், பொதுமக்களை நசுக்கிஅரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது எனவும் அவர்குறிப்பிட்டார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (ஜூலை08) ஜனாதிபதிஅலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

Share this Article