அயோத்தி சிவன் கோவிலின் பிரதம பூசாரி இலங்கை வருகை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியாவின் அயோத்தியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் பிரதம பூசாரி கைலாசானந்த கிறி ஜி மகாராஜ் தலைமையிலான பிரதிநிதி குழு, சிறப்பு விஜயத்திற்காக நேற்று (23/02) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

மத மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உட்பட 14 பேர் கொண்ட இந்த குழு, நியூ டெல்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-192 என்ற விமானத்தில் பயணம் செய்து வந்தது. இவர்களை விமான நிலையத்தில் சுற்றுலா துணை அமைச்சர் ருவன் ரணசிங்க வரவேற்றார்.

அவர்களின் விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள முக்கியமான சிவன் கோவில்கள் பலவற்றை தரிசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணத்திலுள்ள நாகுலேஸ்வரம், திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரம், நுவரெலியாவிலுள்ள சீதா அம்மன் கோவில் மற்றும் பொலன்னறுவையில் அமைந்துள்ள பண்டைய சிவன் கோவில் ஆகிய தலங்களும் அடங்கும்.

மேலும், இவ்விஜயத்தின் போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

Share this Article