அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத்தயார் – சரத்பொன்சேகா !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

என். பி. பி. அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியைவழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய வாயிலான நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தனக்குஅத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் எனவும்குறிப்பிட்டார்.

இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தைஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தான் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர்குறிப்பிட்டார்.

Share this Article