அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த ஜூலை23 அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் செயலாளர்உள்ளடங்கிய குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டகோரிக்கைகளைத் கருத்தில்கொண்டு அவற்றை நேரடியாக பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி நோயாளர் கடல் காவு வண்டியின் அவசியம், வைத்தியசாலையின் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, வைத்தியசாலையினுடைய நீர் விநியோகம் வசதியின்மை, அத்தியாவசிய கட்டிடத் திருத்த வேலைகள்நோயாளருக்கான விடுதி , வைத்தியர் தங்குமிடம், பிரேத அறை உட்பட, பலவிடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், கோரிக்கைகளுக்கு தீர்வுகள் குறுகியகால, நீண்டகால அடிப்படையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் மாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர் உறுதியளித்திருந்ததுடன் சில பிரச்சனைகளுக்கான தீர்வினைஉடனடியாக வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.