அனலைதீவில் கிணற்றில் சடலமாக மிதந்த குடும்பப் பெண் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம்  நேற்று (12/12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது

அனலைதீவு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பையா நளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி இருக்கின்ற சூழலில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்   முறைப்பாடு செய்யப்பட்ட முறைப்பாட்டின்  அடிப்படையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article