நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான 140 அத்தியாவசிய மருந்து வகைகள் முடிவடைந்துள்ளன என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் சஞ்சீவ வெளி நோயாளர் பிரிவு மூலம் வழங்கப்படும் மருந்து வகைகளும் இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அஸ்பிரின், இன்சுலின், மெட்போமின் மற்றும் வலி நிவாரணிகள் அதேபோல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிரப் வகைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.