இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தை உதாசீனம் செய்யும் பாடசாலை அதிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றுநிருபத்தை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நடைமுறைப்படுத்தி வருகிறார் எனவும், வடக்கு மாகாணத்திலும் இச் செயன்முறை முறையாகப் பின்பற்றப்படவேண்டும் எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆசிரியர்கள் வழமையான கைவிரல் அடையாளமிடுதல், 7.30இல் இருந்து 3.30 வரை பாடசாலையில் இருத்தல் என்பன கல்வி அமைச்சினால் கட்டாயமாக்கப்படவில்லை எனவும், எனினும் இதனை அனைத்துப் பாடசாலைகளும் முறையாகப் பின்பற்றவேண்டும் என்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பாடசாலைகள் முகாமை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.