அஜித் ரோஹண உட்பட 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்
இலங்கை பொலிஸில் 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இன்று முதல் உடனடி இடமாற்றம் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த இடமாற்றங்கள் சேவைகளின் அடிப்படையில் செய்யப்பட்டன.
இதற்கமைய 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான புதிய பொறுப்புகள் வருமாறு:
– நந்தன முனசிங்க – நிர்வாகம்
– அஜித் ரோஹண – குற்றங்கள் மற்றும் போக்குவரத்து
– லலித் பதிநாயக்க – சமூக பொலிஸ் மற்றும் சுற்றுச் சூழல்
– பி.எஸ்.எம் தர்மரத்ன – வடமேல் மாகாண பொறுப்பதிகாரி மற்றும் பிரதி வடமத்திய மாகாண பொறுப்பதிகாரி
– கே.ஜெயலத் – வடக்கு மாகாண பொறுப்பதிகாரி
– ரன்மால் கொடித்துவக்கு – ஊவா மாகா பிரதி பொறுப்பதிகாரி
– ஆர்.எல்.தமிந்த -தென் மாகாண பொறுப்பதிகாரி
– என்.எல்.விஜேசேன – அநுராதபுர பிராந்திய பொறுப்பதிகாரி