IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை அரச வைத்தியசாலையொன்றில் முதன்முறையாக, உடலுக்கு வெளியேகருக்கட்டல் (IVF – In Vitro Fertilization) சேவையை ஆரம்பிக்க கொழும்பு காசல்வீதி மகளிர் வைத்தியசாலை தயாராகி வருவதாக வைத்தியசாலையின்பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.

IVF செயல்முறை இந்தச் செயல்முறையின் கீழ், தாயிடமிருந்து பெறப்பட்டமுட்டையும், தந்தையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவும் ஆய்வகத்தில்ஒன்றிணைக்கப்பட்டு, கரு வளர்க்கப்பட்டு, பின்னர் தாயின் கருப்பையில்செலுத்தப்பட உள்ளது.

20 முதல் 30 இலட்சம் செலவு சேமிப்பு தற்போது இந்த பெறுமதிமிக்க சேவையைஎதிர்பார்த்து சுமார் 1,725 தம்பதியினர் காத்திருப்பதாக வைத்தியசாலைபணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாட்டின் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் இந்தத் தொழில்நுட்பம்இல்லாத நிலையில், தனியார் துறையில் இந்தச் சிகிச்சையைப் பெற சுமார்இருபது முதல் முப்பது இலட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது

Share this Article