A-35 வீதி பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அண்மையில் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் தற்காலிகமாக அமைத்த பகுதியில் இருந்து தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது நேற்று (27/12) மாலை 4.00 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இரவு மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article
Leave a comment