சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கைது – 18 படகுகள் பறிமுதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை கடற்படையினரால், கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டு கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பயணித்த 18 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை பொல்மல்குடா, நீலாக்கேணி, கோணேஸ்வரம், கொக்கனட் பொயிண்ட், பவுல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், சல்லிக்கோவில், முல்லைத்தீவு நாயாறு, புதுமாத்தளன், மன்னார் தாழ்வுபாடு, பேசாலை, ஊருமலை, புத்தளம் நுரைச்சோலை மற்றும் கருக்கப்பனை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்பற்று, கோட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share this Article
Leave a comment