தேர்தல் தோல்விக்கு பின்னரும் ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
EVIAN-LES-BAINS, FRANCE - JUNE 17: U.S. President Donald Trump attends a press conference during the G7 Leaders' Summit on June 17, 2026 in Evian-les-Bains, France. Leaders from the Group of 7 (G7) countries convened in Evian, France, near the Swiss border, for their annual summit to discuss challenges to peace and security for Ukraine and Europe, the situation in the Middle East, and other geopolitical issues. (Photo by Anna Moneymaker/Getty Images)

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டை இழந்து பின்னடைவைச் சந்தித்தபோதிலும், ஈரான் மீதான போர் நியாயமானதுதான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04/11) தெரிவித்துள்ளார்.

 “ஈரான் விவகாரத்தில் நாம் செய்ய வேண்டியதைச் செய்தோம், அதைத் தொடர்ந்து செய்வோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 ஈரான் போரின் காரணமாக பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வே, ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற முக்கியக் காரணியாகப் பார்க்கப்பட்டது.

 டெஹ்ரான்  “அணுஆயுதம் வைப்பதைத் தடுப்பதற்கு” இந்தப் போர் அவசியமானது என்று ட்ரம்ப் கூறினார்.

 துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் புதன்கிழமை முன்னதாக தனது சமூக வலைதளப் பதிவில், தேர்தல் தோல்விகளுக்கு “போரே முக்கியக் காரணம்” எனக் குறிப்பிட்டிருந்த கருத்து குறித்துத் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

 “அந்தப் போரைப் பொறுத்தவரை, நான் இதில் எந்த மாற்றத்தையும் செய்திருக்க மாட்டேன் என்பதை என்னால் கூற முடியும்” என்று ட்ரம்ப் கூறினார்.

 மேலும், தேர்தலில் தாம் போட்டியிட்டிருந்தால் “நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்” என்று தாம் நம்புவதாக ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டார்.

 “ஆனால் அவர்களால் அந்த அன்பை பிரதிபலிக்க முடியவில்லை. எனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவ்வளவு அன்பு இருந்தது, அது நம்பமுடியாதது. ஆனால் அந்த அன்பை வேட்பாளர்களுக்கு மாற்ற எங்களால் முடியாமல் போய்விட்டது” என்றும் அவர் கூறினார்

Share this Article
Leave a comment