நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஊடக அறிவித்தலைத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98(8) ஆம் உறுப்புரையின் விதானங்களுக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான பிரதான தேர்தல் பதிவேடு மற்றும் 2026(1) துணைத் தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2511/02) 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொத்த வாக்காளர்கள் மற்றும் ஆசனங்கள்:
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடுகளின்படி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 17,534,397 (1 கோடியே 75 இலட்சத்து 34 ஆயிரத்து 397) வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களால் மொத்தம் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
வாக்காளர்கள் மற்றும் ஆசனங்கள்:
• கம்பஹா மாவட்டம்: 1,927,929 வாக்காளர்கள் (19 ஆசனங்கள்).
• கொழும்பு மாவட்டம்: 1,818,347 வாக்காளர்கள் (19 ஆசனங்கள்).
• குருநாகல் மாவட்டம்: 1,443,921 வாக்காளர்கள் (15 ஆசனங்கள்).
• கண்டி மாவட்டம்: 1,214,014 வாக்காளர்கள் (12 ஆசனங்கள்).
• களுத்துறை மாவட்டம்: 1,048,593 வாக்காளர்கள் (11 ஆசனங்கள்).
• இரத்தினபுரி மாவட்டம்: 944,506 வாக்காளர்கள் (11 ஆசனங்கள்).
• வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களின் விபரம்:
◦ யாழ்ப்பாணம்: 607,489 வாக்காளர்கள் (6 ஆசனங்கள்).
◦ வன்னி: 317,148 வாக்காளர்கள் (6 ஆசனங்கள்).
◦ மட்டக்களப்பு: 464,128 வாக்காளர்கள் (5 ஆசனங்கள்).
◦ திகாமடுல்ல (அம்பாறை): 571,911 வாக்காளர்கள் (7 ஆசனங்கள்).
◦ திருகோணமலை: 325,998 வாக்காளர்கள் (4 ஆசனங்கள்).
• ஏனைய மாவட்டங்களின் விபரம்:
◦ காலி: 920,707 வாக்காளர்கள் (9 ஆசனங்கள்).
◦ அநுராதபுரம்: 757,578 வாக்காளர்கள் (9 ஆசனங்கள்).
◦ கேகாலை: 721,397 வாக்காளர்கள் (9 ஆசனங்கள்).
◦ பதுளை: 718,633 வாக்காளர்கள் (8 ஆசனங்கள்).
◦ மாத்தறை: 697,787 வாக்காளர்கள் (7 ஆசனங்கள்).
◦ ஹம்பாந்தோட்டை: 532,377 வாக்காளர்கள் (7 ஆசனங்கள்).
◦ புத்தளம்: 679,551 வாக்காளர்கள் (8 ஆசனங்கள்).
◦ நுவரெலியா: 616,116 வாக்காளர்கள் (8 ஆசனங்கள்).
◦ மொணராகலை: 410,038 வாக்காளர்கள் (6 ஆசனங்கள்).
◦ பொலன்னறுவை: 357,334 வாக்காளர்கள் (5 ஆசனங்கள்).
◦ மாத்தளை: 438,895 வாக்காளர்கள் (5 ஆசனங்கள்).