வட்ஸ்அப் குழு மூலம் மோசடி செய்த பெண் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பெறுமதிமிக்க பரிசுக் பொதி ஒன்றை வழங்குவதாகக் கூறி, வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக 1,455,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இது தொடர்பில் கணினி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் வடமேல் மாகாண அலகிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபரின் கணக்கிற்கு குறித்த பணத்தை வைப்பு செய்ய வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

 இதற்கமைய, நேற்று (30/10) காலை கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்தில் வைத்து, மேற்கண்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.

 சம்பவம் தொடர்பில் கணினி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

Share this Article
Leave a comment