24 கிராம் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

 2022 ஆம் ஆண்டு கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தப் பிரதிவாதி கைது செய்யப்பட்டிருந்தார்.

 அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் அதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி,

பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

Share this Article
Leave a comment