நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது கடமையிலிருந்த வேளையில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்துக்கு நட்டஈடு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து, அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்ததையடுத்து, அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 விசேட நட்டஈடு கொடுப்பனவுகள்:

பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/936 இன் கீழ் வழங்கப்படும் நட்டஈட்டிற்கு மேலதிகமாக, பின்வரும் விசேட கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 அதன்படி, கடமையின் போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா  ரூ. 5 மில்லியன்.

 முழுமையாக அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா ரூ. 5 மில்லியன்

100% சம்பாத்திய திறனை இழக்கும் வகையில் பகுதியளவில் அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா ரூ. 4 மில்லியன்.

 தற்காலிக பகுதியளவு இயலாமைக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு தலா ரூ. 3 மில்லியனும் வழங்கப்படவுள்ளது.

 அதேநேரம். சிறைச்சாலை தந்திரோபாயப் படையை பலப்படுத்துவதற்காக பின்வரும் நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அந்தப் படைகான சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குதல்.படையை வலுப்படுத்துவதற்காக தகுதியான நபர்களைப் போதியளவில் ஆட்சேர்ப்பு செய்தல். தொடர்புடைய துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்குவதுடன் தேவையான உபகரணங்களை வழங்குதல்.

 சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்காக தலைமையகம் ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல். பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதுடன், சிறைச்சாலை தந்திரோபாயப் படையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Share this Article
Leave a comment