நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயத்தில்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 105,097 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கியதில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.02 சதவீதமாகும். இதன்படி மேல் மாகாணத்தில் 54,673 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 22,053 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 20,384 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 8,378 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும், ஒக்டோபர் மாதத்தின் கடந்த 25 நாட்களில் மட்டும் 4,377 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Share this Article
Leave a comment