சட்டவிரோதமாக மணலைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்டவிரோதமாக மணலைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

உரிய அனுமதியின்றி பெருந்தொகை மணல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்தனர்.

இதன்போது, உரிய அனுமதியின்றிச் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கியூப் மணலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மணல், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article
Leave a comment