சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் கையெழுத்து சேகரிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று (04/10) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கையெழுத்துகளை ஜனாதிபதி ஊடாகவும், பல்வேறு அமைப்புகள் ஊடாகவும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, அனோஜனின் விடுதலைக்கு கோரிக்கை விடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் தன்னார்வமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து அனோஜனுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்தும் கையெழுத்துகளை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment