கொழும்பு சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல் – கைதிகள் இடமாற்றம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசின் விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கைதிகளைக் கண்டி – போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் 100 கைதிகள் போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலிருந்து சுமார் 1,000 கைதிகள் வரை போகம்பறை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றப்படவுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 25,000 விளக்கமறியல் கைதிகள் உட்பட மொத்தம் 36,000 க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article
Leave a comment