கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

.அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணை பணியகம் சந்தேகநபரை கைது செய்துள்ளது.

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.

தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணமோசடி செய்துள்ளார்

வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெண் மோசடி செய்துள்ளார்.  

சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Share this Article
Leave a comment