ஜோசப் விஜய் எனும் நான்.. என்ற வரிகளோடு முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றார் விஜய். இதன்போது, இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரங்கமே அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர்.

தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
தொடர்ந்து அமைச்சர்களது பொறுப்பேற்பு நிகழ்வு, சத்தியப்பிரமாண நிகழ்வு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து முக்கிய கோப்புக்கள் சிலவற்றில் விஜய் கையெழுத்திட்டதுடன் ஆளுநரை வழியனுப்பியப் பின்னர் முதலமைச்சராக மக்களிடத்தில் உரையாற்றினார்.