நாளை முதல்வராகும் விஜய்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார். 

இதற்கமைய நாளை (10/05) காலை 10.00 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று (09/05) மாலை 6.30க்கு தமிழக ஆளுநரை சந்தித்திருந்தார்.

இன்று இரவு தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநர் கேரளா செல்லவிருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டு விஜய்யை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆளுநருடனான சந்திப்புக்காக விஜய்யின் கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை இன்று அளித்துள்ளது.

அதேநேரம் முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கான ஆதரவை வழங்க 120 என்ற ஆசன எண்ணிக்கை தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடைத்தது.

அதன்பின்னர் பெரும்பான்மையுடன் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணியை ஆட்சியமைப்பதற்கு தமிழக ஆளுநர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article