உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளே ஈடுபடுகின்றனர்.
உலகளவில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 25 கோடி மணிநேரத்தை தண்ணீர் சேகரிப்பதற்கே செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வு நேரம் பெருமளவில் நீர் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார வசதிகள் பெண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன.
போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பாடசாலைக்கு செல்ல முடியாமல் சுமார் 1 கோடி வளரிளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், தண்ணீர் தேடி நீண்ட தூரம் பயணிக்கும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரிக்கின்றன.
நில உரிமை பெரும்பாலும் ஆண்களிடமே இருப்பதால், விவசாயம் மற்றும் இதரத் தேவைகளுக்கான நீரைப் பெறுவதிலும் பெண்களுக்குப் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.