நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை (10/03) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை நடைபெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுவதுடன், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வீடுகளை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
மேலும், இந்த தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு வருகை தரும் வைத்தியர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு, இக்கணக்கெடுப்பின் பிரதான ஆய்வாளர் விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.