ஊர்காவற்துறையில் பெண் பிள்ளைகளுக்கான விடுதி திறப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை பிரதேசத்தில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் பெண் பிள்ளைகளுக்கான விடுதியின் கட்டுமான  புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில்  திறப்புவிழா இன்று(07/03) நடைபெற்றது.

விடுதி முதல்வர் அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து விடுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ, கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

இப்பணிக்கான நிதி அனுசரணையை லண்டன் நாட்டின் one child foundation அமைப்பு வழங்கியிருந்ததுடன் இந்நிகழ்வில் இந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment