
வேலணை பிரதேச செயலகமும் கெல்ப் ஏச் நிறுவனமும் இணைந்து நேற்றையதினம் (06.03) நடாத்திய முதியோர்களுக்கான மருத்துவமுகாம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கத்தில் வேலணை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பாமா மோகனமுரளி தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கெல்ப் ஏச் நிறுவன பணிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர், முகாமையாளர், நிறுவன இணைப்பாளர், மருத்துவ குழுவினர்கள் , வேலணை ஆயுள்வேத வைத்திய அதிகாரி மற்றும் அவரது மருத்துவ குழுவினருடன் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்,மற்றும் புங்குடுதீவு பிரதேச கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குழாம் மற்றும் முதியோர் பயனாளிகள் என்பனவோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பயன்பெற்றுக்கொண்டார்கள்.
