கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருக்கு முகவரியிட்ட மகஜரின் பிரதியொன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

அதில், தங்கள் அமைப்பு 2016ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வமாக செயல்பட்டு வருவதாகவும், முன்வைக்கப்பட்ட நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25.2.2026 அன்றைய தினத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டடத்திற்கு அழைக்காமையால் தாம் சமூகமளிக்கவில்லை என்றும் அச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கைv விடுத்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் ஆவணங்களுடன் உண்மை நிலையை விளக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு குறித்த மகஜரில் இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனத்தினர்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த மகஜரின் பிரதிகள்
தலைவர்,கோப்பா குழு இலங்கை பாராளுமன்றம், சி.சிறிதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம். யெ.றஜீவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம். இ.அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம். பிரதி ஆணையாளர் அவர்கள்
கமநல அபிவிருத்தி திணைக்களம்
கிளிநொச்சி,பிரதிப்பணிப்பாளர் அவர்கள் நீர்ப்பாசன திணைக்களம் கிளிநொச்சி.பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்கள்,விரிவாக்கம் கிளிநொச்சி.
பணிப்பாளர் அவர்கள்,தேசிய கணக்காய்வு திணைக்களம். ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்