கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு பணிபுரியவுள்ள நெடுந்தீவு அமைப்புக்களின் பணிக்குழுவினர் நெடுந்தாரகை படகு மூலம் கச்சதீவு சென்றுள்ளனர்
இன்று (25/02) காலை 06:15 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குழுவினர் பயணத்தை ஆரம்பித்தனர்

நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, பல நோ கூ சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம், ஆலய பரிபாலன குழ, சுகாதார பிரிவினர் என பலர் இக்குழுவில் இணைந்திருந்தனர்.
குறித்த பணிக்குழாத்தினர் ஒரு வார காலத்திற்கு தங்கியிருந்து இருநாட்டு பக்தர்களின் நலன்சார்ந்து பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.