கச்சதீவு அந்தோனியார் திருத்தல திருவிழா காலப்பகுதியில் நெடுந்தீவு – கச்சதீவு மற்றும் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை குறித்த கலந்துரையாடல் இன்று (17/02) பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேசசெயலர் ந.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேசசபையின் உப தவிசாளர் ச.விமலதாஸ் மற்றும் நெடுந்தீவை சார்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்மடி குறித்த திருவிழா காலப்பகுதிக்கான படகு சேவை நேர அட்டவணை ஒழுங்குகள் விரைவில் அறியத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது