யாழ் விஜயம் செய்யும் ஜனாதிபதி: வேலணை, மானிப்பாய் பொங்கல் நிகழ்வுகள், மீசாலை வீட்டு திட்ட காசோலை வழங்கல் மற்றும் கொக்குவில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்வில் பங்கேற்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரும் 15ஆம் திகதி மதியம் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4.00 மணியளவில் பங்கேற்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 16ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், அதே நாளில் மதியம் 2.00 மணியளவில் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் “முழு நாடும் ஒன்றாக” எனும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment