மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று (01/01) மாலை கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும்,

கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றா  அவர்களுடைய கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

நபர் ஒருவர் மது போதையில் கொலையுண்ட நபரது வீட்டுக்கு முன்னால் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகவும், இந்நிலையில் குறித்த கொலையுண்ட நபர் மது போதையில் கூச்சலிட்டவர்  வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது  வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதக்கவும், தகவல்கள் தெரிவிக்கின்றன

விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment