யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பணிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் சென்று பார்வையிட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் அமைசார் இ.சந்திரசேகரன்
பணிகளின் தற்போதைய நிலை, எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக இதனபோது ஆலோசிக்கப்பட்டது.
கொழும்புத்துறை இறங்குத்துறை அபிவிருத்தி மூலம் அந்தப் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயனடைவதுடன், கடற்றொழில் நடவடிக்கைகள் மேலும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் தரமான முறையில், நிறைவு செய்யப்படுவதற்காக தேவையான வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதே அநுர அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்