கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் கொழும்பு குணசிங்கபுரவில் வசிக்கும் 56 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (31/12/2025)ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். 

அவர் தனது பொதிகளில் வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், மடிக்கணினிகள், வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் ஒரு தொகை மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்தார். 

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article
Leave a comment