வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள
பதிவு செய்யப்பட்ட 08 கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆற்றுகைப்பொருட்களும் பதிவு செய்யப்பட்ட 36 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (27/12) மதியம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் கலந்து கொண்டார்
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன், பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். தர்சினி, மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் பா. முகுந்தன் உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.