டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அவ்வாறு குடியேற விரும்புபவர்களுக்கு ஒரு கோடி ரூபா நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காணி கொள்வனவு மற்றும், வீடமைப்பு பணிகளைக் குறித்த பயனாளர் முன்னெடுக்க வேண்டும் என்பதோடு இந்த நடைமுறைகள் தொடர்பான தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பயனாளி தனக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.