வடக்கு மாகாண பொதுச்சேவையின் இணைந்த சாரதிகள் சேவையில் நிலவும் மோட்டார் வாகன சாரதி தரம் III பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி அவர்களால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாக நிரப்பப்படவுள்ளன. இப் பரீட்சைக்கான முழுமையான விளம்பரம் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் (Exams and Recruitments → Advertisement → 2025) என்ற பகுதியின் ஊடாகப் (https://np.gov.lk/r-2025-21/) பார்வையிடவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
தகைமையுடைய விண்ணப்பதாரர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026.01.12 இற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.