கிளிநொச்சி கரைச்சியில் Clean Sri Lanka திட்டத்தின் நடமாடும் சேவை!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில்  Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின்  நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று(24.12) புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது

குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் காலை 9.00மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது

“வளமான நாடு அழகான அழகான வாழ்க்கை Clean Sri Lanka கிராமம் தோறும்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வருகின்ற இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நடமாடும் சேவையினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களுக்கான உதவித் திட்டங்களையும் வழங்கி வைத்தார்.

குறித்த நடமாடும் சேவை பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள்,விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்,கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மின்சார சபை தொடர்பான சேவைகள், நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வழங்கப்படும் சேவைகள், ஏனைய திணைக்களங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில்   இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியவகையில்  நடைபெற்றது

மேலும்,  பொதுமக்களுக்கான பல்வேறு வாழ்வாதார திட்டங்களும், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு அவர்களின் குறைபாடுகளுக்கேற்ற மூக்குக் கண்ணாடிகளும், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகளும், வெள்ள நிவாரண உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் ப.பிரபாகர், கரைச்சி பிரதேச Clean Sri Lanka திட்டத்தின் இணைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article