பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (24/12) காலை கரையொதுங்கியுள்ளது.
அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
பட்டர் நிற ரி-சேர்ட் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த சடலம் மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் என சடலத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.