போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்தில்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

 இன்று (24/12) காலை 6.00 மணியளவில் இந்தப் படகு துறைமுகத்தை வந்தடைந்ததாகக் கடற்படை தெரிவித்துள்ளது. 

 குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்த 5 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

 படகிலிருந்து மீட்கப்பட்ட 11 பைகளில் இருந்த போதைப்பொருட்கள் ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கடற்படை கூறியுள்ளது. 

இப்படகு கந்தர பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் அளவு மற்றும் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

 

Share this Article