யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி – 17 வயது மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண நகரில் நேற்று (23/12) காவல்துறையினா் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனையின் போது, பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

இதன்படி

ஐஸ் (Ice): 04 பேர் கைது.

போதை மாத்திரைகள்: 05 பேர் கைது.

கேரள கஞ்சா: ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண தலைமையக காவல்துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (23/12) காலை இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்  மேற்கொண்டு வருவதுடன், அவர்களை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைக்கும் போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிராக காவல்துறையினர்  கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

Share this Article