யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த ரயிலுடனேயே மேற்படி நபர் மோதுண்டுள்ளார். இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article