வவுனியா – வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, தவசிக்குளம் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் வீரபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தொலைபேசி கலந்துரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது