யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்
வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தொடங்கிய ‘Sagar Bandhu’ ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒர் அங்கமாக இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்து பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலத்தை அகற்றி தமது பொறியியல் பிரிவின் Bailey Bridge என குறிப்பிடப்படும் பாலத்தினை அமைக்கும் பணியை கடந்த 7 ம் திகதி ஆரம்பித்திருந்தனர்.

தொடர்ச்சியாக பாலத்தினை அமைக்கும் பணியை மேற்கொண்டு இன்றைய நாளில் (20/12) நிறைவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியின் நிறைவுப்பணிகளை பார்வையிடுவதோடு மேலதிக உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்கான கள விஜயமாக கொன்சியூலர் சாய்முரளி உள்ளிட்ட குழுவினரின் பயணம் அமைந்திருந்தது.