யாழில் மகளின் கண் முன்னே பலியான தாய்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் (20/12) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முந்தி செல்ல முற்பட்டவேளை நிலைகுலைந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்துள்ளனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த  கழிவகற்றும் பவுசர் அந்த தாயின் தலையின்மீது ஏறி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article