கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து நள்ளிரவு 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட அவசர சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்ற விமானங்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு (17/12) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததை விமானிகள் அவதானித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர். இது அவசர நடைமுறைகளுக்கு வழிவகுத்தது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்தான்புல்லுக்கு திட்டமிடப்பட்ட சேவையை இயக்கும் ஏர்பஸ் A330 விமானம், BIA இல் முன்னெச்சரிக்கை அவசர தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளை எரிக்க ஆகாயத்தில் பல சுற்றுக்கள் வட்டமிட்டது. துருக்கிக்கு பயணிப்பதால் அதிக எரிபொருள் நிரப்பப்பட்ட விமானத்தின் எடையை குறைக்க மேலாக விமானம் 20 முறை வரை வானில் வட்டமடித்தது.
பாதுகாப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசர குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , விமானம் பாதுகாப்பாக தறையிறைங்கியது.