1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பின் மீள்குடியேறிய மக்கள், தங்கள் மூதாதையரின் இறுதி அஸ்தி அமைந்திருக்கும் புனித இடமான இந்து மயானத்தை மீட்கப் போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று மயானப் பகுதியைப் பார்வையிட்டார் மயானத்தையும் அதற்கான பாதையையும் மீளப் பெற்றுத் தருவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இந்த மயானம் தற்போது துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை விடுவிக்கக் கோரி மக்கள் 10 ஆண்டுகாலக் கோரிக்கையாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.