யாழ்ப்பாணம் கோட்டையை சூழவுள்ள பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்தை கருத்தில்கொள்ளாது நாட்டப்பட்ட எல்லைக் கல் வீதியில் இருந்து 7 அடி தொலைவில் மீண்டும. நாட்டப்படுகின்றது.
தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள யாழ்ப்பாணம் கோட்டையை சூழ உள்ள பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கில் நான்கு புறமும் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டது.
இவ்வாறு நாட்டப்பட்ட கற்கள் வீதி ஒதுக்கப் பிரதேசம் எவையும் கருத்தில்கொள்ளாது போக்குவரத்திற்கு இடையூறாக வீதி விபத்து ஏற்படும் வகையில் பணிகள் இடம்பெற்றதையடுத்து பணிகளை உடன் நிறுத்தி மாநகரசபையின் வழிகாட்டலுடன் சம்மதத்தைப் பெற்ற பின்பு எல்லையிடுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையால் எழுத்தில் அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணம் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல்த் திணைக்களம் என்பன கூடி ஆராய்ந்து வீதியின் முடிவில் இருந்து 7 அடி இடைவெளியிலும. பிரதான வீதி வளைவில் 10 அடி இடைவெளியிலும் எல்லைக் கற்களை நாட்ட இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் மீண்டும. எல்லைக் கற்கள் நாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது