குறிகட்டுவான் மற்றும் நயீனாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் விரிவான கலந்துரையாடலை அண்மையில் மேற்கொண்டார்.

இதேவேளை அவர்கள் பிடிக்கும் மீன்களை ஏற்றுமதி செய்ய ஏற்ற இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக, அப்பகுதி மீனவ சமூகத்துடன் கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான துறைமுக நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, தகுந்த தீர்வுகளை விரைவாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.