புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை ( 14-12 ) அன்று நடைபெறவுள்ளது.

காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சிரமதான நிகழ்வு மாலை 5.00 மணிக்கு நிறைவுபெறும். சிரமதான நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு, மதிய உணவு , மாலை தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வைத்தியசாலை என்பதை உணர்ந்து மேற்படி சிரமதான நிகழ்வில் கலந்துகொள்ள வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article